×

Privacy Policy

 

தனியுரிமைக் கொள்கை

 

இந்த தனியுரிமைக் கொள்கையில் (“தனியுரிமைக் கொள்கை”) உபயோகப்படுத்தப்படும் மூலதன சொற்கள் இங்கு வேறுவிதமாக வரையறுக்கப்படாவிட்டால், எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் வரையறுக்கப்பட்டுள்ள அதே விளக்கத்தைக் கொண்டிருக்கும், .

இந்த தனியுரிமைக் கொள்கையானது நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம், பாதுகாப்பாக வைத்திருக்கிறோம், செயலாக்குகிறோம், பயன்படுத்துகிறோம், பாதுகாக்கிறோம், சேமிக்கிறோம், பகிர்ந்து கொள்கிறோம் மற்றும் தகவல்களை  (ஒட்டுமொத்தமாகச் சொன்னால்செயல்முறை”, மற்றும்செயலாக்கம்அதற்கேற்ப கட்டமைக்கப்படும்) இடமாற்றம் செய்கிறோம் மற்றும் / அல்லது நீங்கள் எங்களுக்கு வழங்கிய தரவு , நீங்கள் தளத்தைப் பயன்படுத்தும் போது உங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் தகவல் (“தரவு”) உள்ளிட்டவை மட்டுமல்ல மற்றதையும் பற்றி விவரிக்கிறது. இந்த தனியுரிமைக் கொள்கை என்பதுஆன்லைன்” (.கா., வலை மற்றும் மொபைல் சேவைகள்) மற்றும்ஆஃப்லைன்” (.கா., தொலைப்பேசி மூலம் அல்லது நேரில் தரவு சேகரிப்பு) ஆகிய இரண்டையும் உள்ளடக்கி, எங்களுக்குச் சொந்தமான, இயக்கப்படும், வழங்கப்பட்ட மற்றும் / அல்லது கிடைக்கக்கூடிய செயல்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த தனியுரிமைக் கொள்கை குறிப்பாகத் தொடர்புடைய சட்டங்களின் கீழ் தனிப்பட்ட தரவு தனியுரிமை தொடர்பான எங்கள் கடமைகளைக் குறிப்பிடுகிறது. செயல்படுத்தத்தக்க வகையில், உலகளவில் எங்களுடைய செயல்பாடுகளுடன் தொடர்புடைய சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளையும் செயல்முறைகளையும் உபயோகப்படுத்த நாங்கள் செயல்படுத்துகிறோம். எங்களுடைய செயல்பாடுகள் ஒரு மண்டலத்தைத் தவிர வேறு ஏதேனும் தனியுரிமை சட்டத்திற்கு உட்பட்டவை எனில், இந்த தனியுரிமைக் கொள்கையானது நடைமுறைக்கு உட்பட்டதாகவும் அத்தகைய சட்டங்களுடன் ஒத்துப்போகும்.

எங்கள் தனியுரிமைக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் புரிந்துகொள்ள இந்த தனியுரிமைக் கொள்கையைக் கவனமாக மதிப்பாய்வு செய்யவும்.

தளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது உங்களுடைய தரவை எங்களுக்கு அளிப்பதன் மூலமோ, இந்த தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகளை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள், ஒப்புக்கொள்கிறீர்கள் மேலும் உங்களுடைய தரவை மேம்படுத்துவதற்கான கருத்தை எங்களுக்கு அளியுங்கள்.

பிரிவு 2 மற்றும் பிரிவு 4 இல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காகத் தளத்தைப் பயன்படுத்தும் அனைவரும்  தரவை (கீழே உள்ள பிரிவு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி) தானாக முன்வந்து அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் இந்த தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகளை ஏற்றுக் கொல்லவில்லை எனில், இந்த தளத்தைப் பயன்படுத்தவோ அல்லது உங்களைப் பற்றிய எந்த தகவலையும் எங்களுக்குத் தர வேண்டாம். ஆனால், உங்களைப் பற்றிய அத்தகைய தரவை நீங்கள் எங்களுக்கு வழங்காவில்லை எனில் எங்களால் உங்களுக்குச் சேவைகளை வழங்க முடியாது. இந்த தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் உங்களுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்ய விரும்பினால், தயவுசெய்து எங்கள் தரவு தனியுரிமை அதிகாரியிடம் கீழேயுள்ள 11 வது பிரிவின்படியோ அல்லது அவ்வப்போது எங்களால் பரிந்துரைக்கப்பட்ட வேறு எந்த வழியிலாவது மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் எங்களுக்குத் தெரிவிக்கவும். இந்த தனியுரிமை கொள்கை எங்களுடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

இந்த தனியுரிமை கொள்கையை நாங்கள் அவ்வப்போது புதுப்பிக்கவோ அல்லது அதில் ஏதேனும் மாற்றங்களையோ செய்யலாம், இது எங்கள் சமீபத்திய தனியுரிமை கொள்கைகள் மற்றும் நடைமுறைகளைப் பிரதிபலிப்பதாக இருக்கும். திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை நாங்கள் போஸ்ட் செய்த உடன் அதில் இருக்கும் எந்த ஒரு மாற்றங்களும் உடனடியாக செயல்படும். நாங்கள் பொருளில் ஏதேனும் மாற்றங்களைச் செய்தால், அது பற்றிய அறிவிப்பை தளத்தின் மூலம் உங்களுக்கு தெரிவிப்போம். எங்கள் சமீபத்திய தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய தகவல்களுக்கு எங்கள் தனியுரிமைக் கொள்கையை தவறாமல் மதிப்பாய்வு செய்யுமாறு நாங்கள் பரிந்துரை செய்கிறோம். இது போன்ற புதுப்பிப்புகள், மாற்றங்கள் அல்லது அறிவிப்புக்குப் பிறகு நீங்கள் மீண்டும் இயங்குதளத்தை அணுகவோ அல்லது பயன்படுத்துவதோ பொருத்தமாக இருக்கும், அவ்வப்போது தனியுரிமைக் கொள்கையில் ஏற்படும் மாற்றங்களைக் கட்டுப்படுவதற்கு உங்கள் இசைவை ஒருங்கிணைக்கிறது.

நாங்கள் கூகுள் மேப்ஸ் அப்ளிகேஷன் புரோகிராம் இன்டர்ஃபேஸை (ஏபிஐ) பயன்படுத்துவதால், கூகிளின் தனியுரிமைக் கொள்கையானது, அவ்வப்போது கூகிளால் மாற்றியமைக்கப்படலாம், இது பற்றிய குறிப்பு கீழே இருக்கும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது: http://www.google.com/privacy.html.

1.  நாம் என்ன தரவை செயலாக்கம் செய்கிறோம்?

பின்வரும் தரவை நாங்கள் செயலாக்கம் செய்யலாம்:

(a)  உங்களுடைய பெயர், உங்களுடைய மின்னஞ்சல், தொலைப்பேசி எண் மற்றும் / அல்லது பிற தொடர்பு விவரங்கள் மற்றும் உங்கள் வசிப்பிடத் தரவு (ஒருவேளை, இருப்பிடத்தைக் கண்காணிக்கும் தகவல்களை நீங்கள் எங்களுக்கு வழங்க விரும்பவில்லை எனில், உங்கள் சாதனத்தில் இருக்கும் ஜி.பி.எஸ் அல்லது பிற இருப்பிட செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அமைப்புகளை நீங்கள் முடக்கி இருந்தால், உங்களால் சில சேவைகளைப் பயன்படுத்த முடியாது);

(b)  தளத்தை அணுக நீங்கள் உபயோகப்படுத்தும் சாதனம் பற்றிய விவரங்கள், அதில் உங்களுடைய ஐபி முகவரி அல்லது பிற தனிப்பட்ட சாதன குறிகாட்டிகள் இருக்கலாம்;

(c)  கீழே உள்ள பிரிவு 7 இல் குறிப்பிடப்பட்டுள்ள குக்கீகளின் தகவல்;

(d)  நீங்கள் இயங்குதளத்தைப் பயன்படுத்துவதைத் தொடர்ந்து நீங்கள் வழங்கிய வேறு எந்த தகவலும்; (உட்பட ஆனால் எந்த புகைப்படங்களையும் படங்களையும் பதிவேற்றுவது மட்டும் வரையறுக்கப்படவில்லை); மற்றும்

(e)  நீங்கள் எங்களைத் தொடர்பு கொண்டால், அந்த கடிதப் பதிவின் பதிவு.

ஒருவேளை நீங்கள் பங்கேற்பு வழங்குநராக இருந்தால், பின்வரும் தரவையும் நாங்கள் செயலாக்கம் செய்யலாம்:

(f)  எந்தவொரு பதிவு மற்றும் / அல்லது சுயவிவரத் தகவல் மற்றும் தளத்தில் உங்களுடைய பயன்பாடு குறித்த தகவல்களைப் புகாரளித்தல்;

(g)  தொடர்புடைய எந்த கட்டணத்தையும் சேகரித்து நீங்கள் செலுத்த தேவையான விவரங்கள்;

(h)  மதிப்பீட்டுத் தகவல் (தளத்தில் இருக்கும் மற்ற பயனர்கள் உங்களை ஒரு பங்கேற்பு வழங்குநராக மதிப்பிடுவார்கள்); மற்றும்

(i)  உங்களுடைய செயலாக்கம், செயல்பாட்டு (உட்பட ஆனால் எந்த புகைப்படங்களையும் படங்களையும் பதிவேற்றுவது மட்டும் வரையறுக்கப்படவில்லை, விநியோகத்திற்கான மின்னணு சான்று போன்றவை); மற்றும் நிதி விவரங்கள்.

இந்த தனியுரிமைக் கொள்கை தளத்தில் அல்லது நாங்கள் செயல்படும் ஏதேனும் சில பகுதிகளில் எந்த வழிகளிலும் உங்களால் எங்களுக்கு அளிக்கப்படும் எந்தவொரு தேவையில்லாத தகவலுக்கும் பொருந்தாது என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள். பொருந்தக்கூடிய இடங்களில், தேவையில்லாத அனைத்து தகவல்களும் இரகசியமற்றவை எனக் கருதப்படும், மேலும் இது மாதிரியான  தேவையில்லாத தகவல்களை வரம்பு அல்லது பண்பு இல்லாமல் மற்றவர்களுக்கு செயலாக்க, உருவாக்கம் செய்ய, வெளிப்படுத்த மற்றும் விநியோகிக்க எங்களுக்கு முழு  சுதந்திரம் இருக்கிறது.

  1. நாங்கள் தரவை எதற்காகப் பயன்படுத்துகிறோம்?

தளத்திலும் சேவைகளிலும் தரவை செயலாக்கம் செய்வதற்கான நோக்கங்கள் (“நோக்கங்கள்”) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

(a)  உங்களுடைய அடையாளத்தை சரிபார்க்க;

(b)  எந்தவொரு ஆர்டர்களையும் பண வழங்கீடுகளையும் செயலாக்கம் செய்வது உள்ளிட்ட சேவைகளை உங்களுக்கு வழங்க;

(c)  சேவைகளை இயக்க, பாதுகாக்க, மேம்படுத்த மற்றும் சிறப்பாகச் செய்ய மற்றும் தளத்தின் பயனர் அனுபவங்களை மேம்படுத்துதல் மற்றும் தனிப்பயனாக்குதல்;

(d)  தளத்தின் மாற்றங்கள் குறித்து உங்களுக்கு தெரியப்படுத்த அல்லது எந்தவொரு தகவல்தொடர்பு மற்றும் / அல்லது உங்களிடமிருந்து வரும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க;

(e)  தளத்தின் பயன்பாட்டைக் கண்காணிக்க;

(f)  ஏதாவது ஒரு புகாரளிக்கப்பட்ட சம்பவங்கள், புகார்கள் அல்லது சேவைகளின் மீறல்கள் குறித்து விசாரிக்க;

(g)  கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரிவு 4 இன் படி உங்களுக்குச் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர பொருட்கள் மற்றும் செய்திகளை வழங்குவதுடன் தொடர்புடைய சட்டங்களின் இணக்கத்திற்கு உட்பட்டது;

(h)  சந்தைப்படுத்தப்பட்ட மற்றும் விளம்பரப்படுத்தப்பட்ட பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் விளம்பரத்தின் பயன்களை அடைந்திருக்கிறீர்களா என்பதை அடையாளம் கண்டுகொள்ள;

(i)  உங்களை பற்றிய அனைத்து புள்ளிவிவரங்களைத் தொகுத்தல் மற்றும் நீங்கள் பயன்படுத்திய தளம் மற்றும் சேவைகள் பயன்பாட்டைப் பகுப்பாய்வு செய்ய;

(j)  பொருந்தக்கூடிய மற்றும் தொடர்புடைய சட்டங்களின் இணக்கத்திற்கு உட்பட்டு, உங்களுக்கு சேவைகள் வழங்குவது தொடர்பாக மூன்றாம் தரப்பினர் உள்ளிட்ட பிற மூலங்களிலிருந்து பிற நோக்கங்களுக்காகச் சேகரிக்கப்பட்ட பிற தரவுகளுடன் உங்களுடைய தரவை பொருத்துவதற்கும்.

(k)  எங்களால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் சந்தைப்படுத்தல் சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் / அல்லது எங்களின் மற்றும் / அல்லது எங்கள் வாடிக்கையாளர்களின் விளம்பரங்கள் தொடர்பான நோக்கங்களுக்காக எங்கள் தரவை செயலாக்குவதற்கு வசதியாக;

(l)  அவ்வப்போது பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் கீழ் எங்கள் கடமைகளுக்கு இணங்க;

(m)  நீங்கள் ஏதேனும் ஒரு குற்றம் செய்துள்ளதாக நாங்கள் சந்தேகிக்கும் போது, நீங்கள் ஏதேனும் மோசடி செய்ததாக நாங்கள் சந்தேகிக்கும் போதோ அல்லது சம்பந்தப்பட்ட சட்டங்கள் அல்லது நீதிமன்ற உத்தரவுகளின் ஆணைக்கு இணங்க தேவைப்படும்போதோ அல்லது சம்பந்தப்பட்ட பொது மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டு தொடர்புடைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்க / அல்லது உதவ; மற்றும்

(n)  மேற்கண்ட நோக்கங்களுடன் உங்களுக்குத் தயாரிப்பு பொருட்கள் மற்றும் சேவைகளை வடிவமைத்தல் மற்றும் வழங்குதல்.

சம்பந்தப்பட்ட சட்டங்களின் படி தேவைப்பட்டால் தரவை எவ்வாறு செயலாக்கம் செய்கிறோம் என்பதை மாற்றுவதற்கு  உங்களுடைய வெளிப்படையான ஒப்புதலை நாங்கள் நாடுவோம், ஆனால் இதுமாதிரியான மாற்றங்களைத் தொடர்ந்து சேவைகளைப் பயன்படுத்துவது திருத்தப்பட்ட அறிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.

  1. வெளி நபருக்கு நாங்கள் எந்த தரவையும் வெளியிடுகிறோமா?

நாங்கள் தரவை அணுக எங்களால் முறையாக அனுமதியளிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மட்டுமே பொதுவாக அனுமதியளிக்கிறோம்மேலும் தரவை பின்வரும் சூழ்நிலைகளில் மட்டுமே மூன்றாம் தரப்பினருக்கு நாங்கள் அளிப்போம்:

(a)  தரவு வெளிப்படுத்தப்படும், அளிக்கப்படும் மற்றும் / அல்லது பரிமாற்றம் செய்யப்படும் இடம்:

(i)  எந்தவொரு மூன்றாம் தரப்பு வழங்குநர்கள் அல்லது வெளிப்புற சேவை வழங்குநர்கள், போன்ற தரவை உபயோகப்படுத்த எங்களால் முறையாக அனுமதி அளிக்கப்பட்டவர்கள் மற்றும் ரகசியத்தன்மை கடமையின் கீழ், தளத்தில் சேவைகளைச் சுலபமாக்கும் ஒருவர்;

(ii)  இது போன்ற தரவை உபயோகப்படுத்த எங்களால் முறையாக அனுமதியளிக்கப்பட்ட எங்களுடைய முகவர்கள்;

(iii)  எங்கள் வணிகத்தின் அனைத்து அல்லது ஒரு பகுதி விற்பனை அல்லது விற்பனை முன்மொழிவு அல்லது பொருட்கள் அல்லது பிற சொத்துக்களின் முதலீடுகளின் போது;

(iv)  உங்களுக்குப் பிடித்த பொருட்கள் அல்லது சேவைகள் குறித்து சந்தைப்படுத்தல் மற்றும் / அல்லது சந்தைப்படுத்தல் தொடர்பாக நாங்கள், எங்களுடைய வணிக கூட்டாளர்கள் மற்றும் / அல்லது முகவர்களுக்கு;

(v)  கீழேயுள்ள 4 வது படிநிலையில் குறிப்பிடப்பட்டுள்ள படி எந்தவொரு வெளி நபர்களுக்கும் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி);

(b)  கடன் பரிந்துரை செய்யும் ஏஜென்சி, கடன் வசூல் ஏஜென்சி, மோசடியைக் கண்டறிதல் மற்றும் / அல்லது தடுப்பு ஏஜென்சி நிறுவனங்களுக்கு;

(c)  எந்தவொரு பொது அதிகாரிகளுக்கும் அல்லது சட்ட அமலாக்க ஏஜென்சிகளுக்கும், உதாரணமாக, நீங்கள் ஏதேனும் குற்றம் செய்திருக்கலாம் என்று எங்களுக்குச் சந்தேகம் ஏற்படும் போது, நீங்கள் மோசடி செய்துள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிக்கும் போது அல்லது பொருந்தக்கூடிய சட்டம், ஒழுங்குமுறை அல்லது சட்ட நடவடிக்கைகளால் தேவைப்படும் இடங்களில்;

(d)  நீங்கள் தளத்தை உபயோகப்படுத்துவதற்காக எங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைச் செயலாக்க அல்லது அமல்படுத்துவதற்காக அல்லது நீங்கள் எங்களுடன் இணைந்து இருக்கும் வேறு எந்த ஒப்பந்தமும் பொருந்தும் இடங்கள்; மற்றும்

(e)  நாங்கள் சேவைகளைப் பராமரிப்பதையும் மேம்படுத்துவதையும் அவசியமானதாக கருதுகிறோம்.

எந்தவொரு சமூக இணையதள தள அம்சங்களையும் உபயோகப்படுத்தும் போது நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்ஏனெனில் நீங்கள் அதில் வெளிப்படுத்தக்கூடிய தரவை மற்ற பயனர்களால் காண முடியும். நீங்கள் தரவைப் பகிர தேர்ந்தெடுத்த சமூக இணையதள அம்சங்களின் பிற பயனர்களின் செயல்படுகளை எங்களால் கட்டுப்படுத்த இயலாது என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்கிறீர்கள், எங்களின் விருப்பப்படி வணிகத்தில் அப்படிச் செய்வதற்கான உரிமையை நாங்கள் வைத்திருந்தாலும்வணிகத்தின் சாதாரண போக்கில் இதுபோன்ற அம்சங்களை உபயோகப்படுத்துவதை நாங்கள் கண்காணிக்கவில்லை. எனவேஅனுமதியளிக்கப்படாத நபர்களால் தரவு மதிப்பாய்வு செய்யப்படாது என்பதற்கு எங்களால் உத்தரவாதம் வழங்க முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்.

சில சமயங்களில், எங்களிடமிருந்தும் மற்றும் / அல்லது எங்களுடைய சேவை வழங்குநர்களிடம் இருந்தும் பகுதிக்கு  வெளியேயும் அல்லது தளம் செயல்படுகின்ற பிற நாடுகளிலும் அதிகார எல்லைக்கு உட்பட்டு சில தரவை மாற்றுவது கண்டிப்பாக மற்றும் / அல்லது  கவனமுடன் இருக்க வேண்டும். எங்களுடைய சேவையகங்கள், வழங்குநர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் யாராவது வெளிநாடுகளில் இருந்தால் அல்லது இதுபோன்ற வெளிநாடுகள் மற்றும் அதிகார எல்லைக்கு உட்பட்டு இருக்கும்போது நீங்கள் தளம் மற்றும் சேவைகளை உபயோகப்படுத்தினால் இது நிகழலாம். இந்த தனியுரிமைக் கொள்கை மற்றும் சம்மந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தரவு செயல்படுவதை உறுதி படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம், மேலும் அனைத்து மூன்றாம் தரப்பினரும் கடுமையான இரகசியத்தன்மை மற்றும் தரவு பாதுகாப்பு கடமைகளைப் பின்பற்றுகின்றனர். சம்மந்தப்பட்ட சட்டங்களின் கீழ் வேண்டியதை காட்டிலும் குறைந்தபட்சம் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய ஒரு நிலையான பாதுகாப்பைத் தரவு தொடர்ந்து பெறுவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம். இயங்குதளம் மற்றும் சேவைகளை உபயோகப்படுத்தி இந்த தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பிராந்தியத்தில் / பிராந்தியத்திற்கு தரவை செயலாக்க ஒப்புக்கொள்கிறீர்கள்.

4.  நாங்கள் தகவல் தொடர்பு ,சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நோக்கங்களுக்காகத் தரவை செயல்படுத்துகிறோமா?

நாங்கள் அவ்வப்போது உங்களுக்கு தொலைபேசி அழைப்புகளைச் செய்ய உத்தேசித்துள்ளோம் அல்லது உங்களுக்கு நேரடியாக மின்னஞ்சல், தொலைநகல் அல்லது வேறு ஏதேனும் தகவல்தொடர்பு வழிமுறைகள் (உட்பட ஆனால் வாட்ஸ்அப்பின் பயன்பாடு மட்டும் அல்ல) பொருட்கள், வசதிகள் அல்லது சேவைகளின் கிடைக்கும் தன்மையை வழங்க அல்லது விளம்பரப்படுத்த அல்லது தொண்டு, கலாச்சார, பரோபகார, பொழுதுபோக்கு, அரசியல் அல்லது பிற நோக்கங்களுக்காக நன்கொடைகள் அல்லது பங்களிப்புகளை கோருவதற்காக (“நேரடி சந்தைப்படுத்தல்“)

சேவைகள்தயாரிப்புகள் மற்றும் பொருட்களுக்கான பின்வரும் பிரிவுகள் சந்தைப்படுத்தப்படலாம்:

(a)  போக்குவரத்துதளவாடங்கள் மற்றும் வாகனங்கள் சம்மந்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள்;

(b)  உங்களுக்கும், தளத்தில் இருக்கின்ற பிற பயனர்களுக்கும் நாங்கள் அளித்த சிறப்பு நிகழ்வுகள்; மற்றும் அவை மட்டுமின்றிபோட்டிகள் மற்றும் சமூகக் கூட்டங்கள் உட்பட.  

(c)  சேவைகள் மற்றும் சம்மந்தப்பட்ட தயாரிப்புகள் தொடர்பான வெகுமதிஆதரவு அல்லது சலுகைகள் திட்டங்கள்;

(d)  கூப்பன்கள்பொருள் வாங்குவதற்கான தள்ளுபடிகள்மற்றும் விளம்பர பிரச்சாரம் உள்ளிட்டவை. ஆனால், அவை மட்டுமின்றி சேவைகள் மற்றும் சம்மந்தப்பட்ட பொருட்கள் தொடர்பான சிறப்பு சலுகைகள்;

(e)  உங்களின் விருப்பத்திற்கேற்ற முகவர்கள், எங்களுடைய வணிக கூட்டாளர்கள் மற்றும் எங்களால் அளிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள்

(f)  எங்களாலும், எங்களுடைய விளம்பரதாரர்களாலும் அளிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் (அவற்றின் பெயர்கள் சம்மந்தப்பட்ட விளம்பரங்கள் மற்றும் / அல்லது தொடர்புடைய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விளம்பர அல்லது சந்தைப்படுத்தல் பொருட்களில் காணப்படலாம்)மற்றும்

(g)  தொண்டு நிறுவனம் மற்றும் / அல்லது இலாப நோக்கற்ற குறிக்கோளிற்கான நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகள்.

 மேலே விவரிக்கப்பட்ட பொருட்கள்சேவைகள் மற்றும் தயாரிப்புகள் ஆகியவை எங்களால் அளிக்கப்படலாம் அல்லது கோரப்படலாம்,  மேற்கண்ட சேவைகள்தயாரிப்புகள் மற்றும் பொருட்களைத் தொண்டு நிறுவனம் மற்றும் / அல்லது இலாப  நோக்கமற்ற நிறுவனங்கள் (“மூன்றாம் நபர்கள்”), மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் ஆகியோரும் அளிக்கலாம். மேலே குறிப்பிட்ட மூன்றாம் தரப்பு நபர்களின் சேவைகள்,  தயாரிப்புகள் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்துவதில், உபயோகப்படுத்துவதற்காக, நாங்கள் அவர்களுக்குத் தரவுகளை வழங்கலாம்.

உங்கள் அனுமதியின்றி, நேரடி சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக அல்லது நேரடி சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக மூன்றாம் தரப்பினருக்கு தரவை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். பிளாட்ஃபார்மில் நீங்கள் பதிவு செய்தவுடன், நீங்கள் ஒரு பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள், அங்கு நீங்கள் சம்மதம் தெரிவிக்கும்படி கேட்கப்படுவீர்கள், நேரடி சந்தைப்படுத்துதலில் நாங்கள் உத்தேசித்துள்ள தரவுகளின் அனைத்து அல்லது பகுதிகளுக்கும் ஆட்சேபனை அல்லது எதிர்ப்பு இல்லை மற்றும் நேரடி சந்தைப்படுத்துதலில் பயன்படுத்துவதற்காக வெளி தரப்பினருக்கு நாங்கள் உத்தேசித்துள்ள தரவை வழங்குதல். உங்கள் பதில் அனுப்பப்பட்டு எங்கள் கணினியில் சேமிக்கப்படும்.

நேரடி சந்தைப்படுத்துதலுடன் கூடுதலாக, நாங்கள் அவ்வப்போது உங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் செய்யலாம் அல்லது அஞ்சல், தொலைநகல், மின்னஞ்சல் அல்லது வேறு ஏதேனும் தகவல்தொடர்பு வழிமுறைகள் மூலம் நேரடியாக தகவல் அனுப்பலாம் என்று நீங்கள் இதன் மூலம் ஒப்புக்கொள்கிறீர்கள் (உட்பட ஆனால் வாட்ஸ்அப்பின் பயன்பாடு மட்டும் அல்ல) உங்களுடன் தொடர்புகொள்வதற்காக தரவுகளின் அடிப்படையில்.

உங்கள் தரவின் ஆஃப்லைன் சேகரிப்பு (.கா., தொலைபேசி அழைப்புகள் அல்லது நேரில்) இருந்திருந்தால், உங்கள் சம்மதத்தை எங்கள் ஊழியர்கள் வாய்மொழியாகக் கேட்டு, சம்மதம் தெரிவிக்க வேண்டும், நேரடி சந்தைப்படுத்துதலில் நாங்கள் உத்தேசித்துள்ள தரவுகளின் அனைத்து அல்லது பகுதிகளுக்கும் ஆட்சேபனை அல்லது ஆட்சேபனை இல்லை மற்றும் நேரடி சந்தைப்படுத்துதலில் பயன்படுத்துவதற்காக வெளி தரப்பினருக்கு நாங்கள் உத்தேசித்துள்ள தரவை வழங்குதல். மற்றும் அவ்வப்போது உங்களுடன் தொடர்புகொள்வதற்காக. உங்கள் சம்மதம் அல்லது ஆட்சேபனை இல்லாததற்கான அறிகுறியை எங்கள் ஊழியர்கள் பெற்ற 14 நாட்களுக்குள், உங்கள் பதிவுக்கான எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தலை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ உங்களுக்கு அனுப்புவோம்.

உங்கள் ஆட்சேபனையை அனைவருக்கும் தெரிவிப்பதன் மூலம் என்பதை நினைவில் கொள்ளவும் அல்லது நேரடி சந்தைப்படுத்துதலில் நாங்கள் உத்தேசித்துள்ள தரவின் சில பகுதிகள் மற்றும் நேரடி சந்தைப்படுத்தல் மற்றும்/அல்லது உங்களுடன் தொடர்புகொள்வதற்காக வெளி தரப்பினருக்கான தரவை நாங்கள் உத்தேசித்துள்ளோம்

  1. நீங்கள் சில அல்லது அனைத்து சேவைகளையும் பயன்படுத்த முடியாமல் போகலாம்; மற்றும்
  2. நீங்கள் இன்னும் மார்க்கெட்டிங் அல்லாத மற்றும் விளம்பரம் அல்லாத செய்திகளைப் பெறலாம், உட்பட ஆனால் தயாரிப்பு புதுப்பிப்புகள் வரையறுக்கப்படவில்லை மற்றும் பொருந்தக்கூடிய உள்ளூர் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட சேவை அறிவிப்புகள்

உங்கள் தரவை நேரடி சந்தைப்படுத்தல் மற்றும் முதல் முறையாக உங்களுடன் தொடர்புகொள்வதற்காகப் பயன்படுத்தும்போது, அத்தகைய பயன்பாட்டை நிறுத்துமாறு கோருவதற்கான உங்கள் உரிமையை நாங்கள் உங்களுக்கு நினைவூட்டுவோம்.

நேரடி சந்தைப்படுத்துதலில் உங்கள் தரவைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு நாங்கள் கோருவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது அல்லது நேரடி சந்தைப்படுத்துதலில் பயன்படுத்துவதற்காக வெளி தரப்பினருக்கு உங்கள் தரவை வழங்குவதை நிறுத்துங்கள் மற்றும்/அல்லது எந்த நேரத்திலும் உங்களுடன் தொடர்புகொள்வதற்காக நீங்கள் முன்பு சம்மதம் தெரிவித்த பிறகும் அல்லது அத்தகைய பயன்பாட்டிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

5.  உங்கள் தரவை அணுகிச் சரிசெய்ய முடியுமா?

சம்மந்தப்பட்ட சட்டங்களால் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டால்உங்களுக்குப் பின்வருவனவற்றின் மீது  உரிமை உண்டு:

(a)  எந்தவொரு தரவையும் நாங்கள் வைத்திருக்கிறோமா என்று சரிபார்க்கவும்அப்படி நாங்கள் தரவை வைத்திருந்தால்அந்த தரவினுடைய நகல்களைப் பெறவும்;

(b)  சரியாக இல்லாத எந்த தரவையும் திருத்தம் செய்யுமாறு கோரவும்மற்றும்

(c)  சம்மந்தப்பட்ட சட்டங்களால் வெளிப்படையாக அனுமதி அளிக்கப்பட்ட வேறு எந்த கோரிக்கைக்கும் உரிமை உண்டு.

சம்மந்தப்பட்ட சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுதரவு அணுகல் கோரிக்கையை செயல்படுத்துவதற்கு நியாயமான  கட்டணத்தை வாங்க எங்களுக்கு உரிமை உள்ளதுசம்மந்தப்பட்ட சட்ட விதிமுறைகள் வெளிப்படையாக அனுமதி  வழங்கினால்உங்களிடமிருந்து தரவு அணுகல் கோரிக்கையைப் பெற்ற பிறகு, அதற்கான கட்டணம் எவ்வளவு என்பதற்கான மதிப்பீட்டை நாங்கள் உங்களுக்கு அளிப்போம்எனினும்வாங்க வேண்டிய இறுதிக் கட்டணம் மதிப்பிடப்பட்ட  கட்டணத்திலிருந்து மாறுபடலாம்வாங்க வேண்டிய இறுதிக் கட்டணம் மதிப்பிடப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் அதிகமாக  இருந்தால்நாங்கள் கூடுதல் கட்டணத்தை உங்களிடம் தெரிவிப்போம். நீங்கள் அந்தக் கட்டணத்தைச் செலுத்தவில்லை  என்றால், உங்கள் தரவு அணுகல் கோரிக்கை மறுக்கப்படலாம்.

 தரவு தொடர்பாக மேலே நீங்கள் கோரிக்கை செய்தவை கீழுள்ள பிரிவு 11–ன் படி, எங்களுடைய தரவு தனியுரிமை அதிகாரிக்கு மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது தபால் வாயிலாகவோ தொடர்பு கொள்ளப்படலாம். இதுபோன்ற எந்தவொரு கோரிக்கைகளையும், அது தொடர்பான தரவின் தெளிவான விவரங்களோடு குறிப்பிட வேண்டும்மேலும் அத்தகைய தரவை அணுக மற்றும்/அல்லது திருத்தம் செய்வதற்காக நீங்கள் செய்த கோரிக்கை தொடர்பாக, உங்கள் அடையாளத்தை நிரூபிக்குமாறு நாங்கள் கோரலாம்.

 6.  நாங்கள் தரவை எப்படிப் பாதுகாக்கிறோம்?

தரவை, அனுமதியில்லாமல் அணுகுவதுஎதிர்பாராத விதமாக ஏற்படும் இழப்பு அல்லது அழிவிலிருந்து பேணி காக்க அவசியமான நடவடிக்கைகள் எங்களிடம் இருக்கின்றது. சேவைகளுடைய சில பகுதிகளை நீங்கள் அணுகுவதில்உங்களுக்கு உதவுவதற்காக நாங்கள் உங்களுக்கென தனியாகக் கொடுத்த கடவுச்சொல்லை (அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள)ரகசியமாக வைத்திருப்பது உங்களுடைய பொறுப்பு ஆகும். உங்களுடைய கடவுச்சொல்லை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

 எதிர்பாராத விதமாகஇணையம் மூலமாகத் தரவு பரிமாற்றம் செய்வது முற்றிலும் பாதுகாப்பு கிடையாது. நீங்கள் அனுப்பிய  தரவை நாங்கள் பாதுகாக்க முயற்சிக்கும் போதுநீங்கள் சேவைகளுக்கு அனுப்பும் தரவின் பாதுகாப்பிற்கு எங்களால்  உத்தரவாதம் அளிக்க முடியாதுஎந்தவொரு பரிமாற்றமும் உங்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் தான் உள்ளது. தரவை நாங்கள் பெற்றதும்அனுமதியற்ற அணுகலைத் தடுக்க முயற்சிக்கும் விதமாகக் கடுமையான செயல்முறை மற்றும் பாதுகாப்பு  அம்சங்களை உபயோகப்படுத்துவோம். சைபர்பாதுகாப்பு அபாயங்கள் எதுவும் ஏற்பட்டால்நாங்கள் எச்சரிக்கைகள் கொடுத்து, இது தொடர்புடைய சட்டங்களின்படி உங்களுக்கு வழிமுறைகளை அளிப்போம்.                

7.  நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோமா?

கூகிள் அனலிட்டிக்ஸை பயன்படுத்தி பயனர்கள் தளத்தையும் சேவைகளையும் எப்படி உபயோகப்படுத்துகிறார்கள் என்பதைப்  பகுப்பாய்வு செய்கிறோம். கூகிள் அனலிட்டிக்ஸ் என்பது கூகிள் எல்எல்சி அளித்த இணையதள பகுப்பாய்வு சேவையாகும்எங்களுடைய தளத்தில் சேவைகளின் உபயோகத்தைக் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும்அதன்  செயல்முறைகள் குறித்த அறிக்கைகளை தயார்செய்யவும், அவற்றைப் பிற கூகிள் சேவைகளுடன் பகிர்ந்து கொள்ளவும் கூகிள் சேகரிக்கப்பட்ட தரவை பயன்படுத்துகிறது. சேகரிக்கப்பட்ட தரவை கூகிள் தனது சொந்த விளம்பர நெட்வொர்க்கின் விளம்பரங்களை ஆய்வு செய்யவும், தனிப்பயனாக்கவும் உபயோகப்படுத்தலாம். இந்த தளத்தில் செயல்படுத்தப்பட்ட கூகுள் அனலிட்டிக்ஸ் அம்சங்களில் காட்சி விளம்பரம் (புள்ளிவிவரங்கள் மற்றும் வட்டி அறிக்கை) அடங்கும். கூகுள் அனலிட்டிக்ஸின் சேவை விதிமுறைகளின் படி, தளத்திற்கு நீங்கள் வந்தது குறித்து கூகுள் அனலிட்டிக்ஸ் சேகரித்த தகவல்களை உபயோகப்படுத்துவதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் கூகிளுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

எங்களுடைய சேவைகளின் ஒரு பகுதியாக சில குக்கீகளையும் (கூகுள் அனலிட்டிக்ஸ் குக்கீகள் போன்றவை) மற்றும் அதே போன்ற பிற ஒரே மாதிரியான தொழில்நுட்பங்களையும் உபயோகப்படுத்துகிறோம். உபயோகப்படுத்தப்படும் குக்கீகள் சேவைகளை உபயோகப்படுத்த உங்களுக்கு உதவும் எண்ணத்திற்காக (எடுத்துக்காட்டாகஒரு பதிவு அல்லது அணுகல் தகவலை முடிக்க உங்களுக்கு உதவுவதற்காக) மற்றும் வருங்காலத்தில் மீண்டும் பயன்படுத்தும் போது உங்களின் விருப்பங்களைத் தெரிந்து கொண்டு சேமிப்பதற்கும்பயன்பாட்டு முறைகளை ஆய்வு செய்வதற்கும்விளம்பரங்களைக் கண்காணிக்கவும் தள வர்த்தகம் மற்றும் தள தொடர்பு பற்றிய மொத்த தரவை சேகரித்துஎதிர்காலத்தில் இந்த தளத்திற்கான சிறந்த தள அனுபவங்களையும், கருவிகளையும் நாங்கள் வழங்க முடியும். இந்த தனியுரிமைக் கொள்கையின்படி எங்கள் தள பார்வையாளர்களை நன்கு  தெரிந்து கொண்டு எங்களுக்கு உதவ மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்யலாம்.

 சேவைகளின் எல்லா பகுதிகளையும் உபயோகப்படுத்துவதை இது தடுக்கக்கூடும் (உங்கள் பிரௌசர் அல்லது சாதன  அமைப்புகளை மாற்றுவதன் மூலம்) என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும்குக்கீகளை முடக்க நீங்கள் தேர்வு செய்யலாம்.

 8.  தரவு வைத்திருத்தல்

 தரவை நாங்கள் பெற்றவுடன்எங்களுடைய கணினியில் அந்த தரவு பாதுகாப்பாக பராமரிக்கப்படும்மற்றும் சட்டத் தேவைகள்  மற்றும் எங்கள் உள் கொள்கைக்கு உட்பட்டுதொடர்புடைய சேவைகளைச் செயலிழக்கச் செய்தபின் அதை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருப்போம்அந்த தரவு செயல்படுத்தப்பட்ட குறிக்கோளிற்காக இன்னும் தேவைப்படுகிறது.

9.   மூன்றாம் தரப்பு இணையதளங்களுக்கான இணைப்புகள்

எங்களுடைய விருப்பத்தின் பேரில்இந்த தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டுமூன்றாம் தரப்பு பொருட்கள் அல்லது  சேவைகளை நாங்கள் தளத்தில் சேர்க்கலாம் அல்லது அளிக்கலாம். தளத்தில் மூன்றாம் தரப்பு பொருட்கள் அல்லது  சேவைகளை நாங்கள் சேர்க்கலாம் அல்லது அளிக்கலாம் என்று கூறியதானால் நாங்கள் அத்தகைய மூன்றாம் தரப்பினரால் எங்களுடைய தரவு சேகரிக்கப்படுவதை அங்கீகரிக்கிறோம் அல்லது ஒப்புதல் அளிக்கிறோம் என்று அர்த்தம் கிடையாது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்மேலும் இது எங்களுக்கும் அத்தகைய மூன்றாம் தரப்பினருக்கும் இடையில் எந்தவொரு தொடர்பையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை. நீங்கள் அதைப் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்:

(a)  மூன்றாம் தரப்பு இணையதளங்கள், செயலிகள் அல்லது விளம்பரங்களுக்கான இணைப்பைக் கிளிக் செய்தவுடன், தரவை சேகரிக்கக்கூடிய மூன்றாம் தரப்பு இணையதளங்கள்செயலிகள் மற்றும் விளம்பரங்களை நீங்கள் அணுகுவீர்கள்;

(b)  அது போன்ற மூன்றாம் தரப்பு இணையதளங்கள்செயலிகள் மற்றும் விளம்பரங்கள் போன்றவை நீங்கள் அவர்களுக்கு சமர்பிக்கக் கூடிய தரவை செயல்படுத்துவது தொடர்பான தனியானசுயாதீன தனியுரிமைக் கொள்கைகளை பின்பற்றுகின்றனமற்றும்

(c)  எனவேஇந்த இணைக்கப்பட்ட இணையதளங்கள்செயலிகள் மற்றும் விளம்பரங்களின் உள்ளடக்கம் மற்றும் செயல்களுக்கும் எங்களுக்கு எந்த பொறுப்பும் கிடையாது (அத்தகைய மூன்றாம் தரப்பினரால் தரவை செயலாக்குவது உட்பட)

 இருந்தாலும் கூடதளத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க நாங்கள் முற்படுகிறோம்மேலும் இந்த தளங்கள் குறித்த  எந்தவொரு கருத்தையும் கூறவும்.

 10.  சிறுவர்களின் மற்றும் / அல்லது பிற நபர்களின் தரவு

 சில சூழ்நிலைகளில்நீங்கள் சிறுவர்கள் மற்றும் / அல்லது மற்ற நபர்கள் தொடர்புடைய தரவை அளித்திருக்கலாம்நீங்கள்  தரவை இதுபோன்ற சூழ்நிலைகளில் எங்களுக்கு அளிக்க உங்களுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்,  உத்தரவாதம் அளிக்கிறீர்கள்மேலும் இந்த தனியுரிமை கொள்கையில் உள்ளவாறு தரவு செயல்முறைப்படுத்துவதற்கு அவர்களின் ஒப்புதலைப் பெற்றுள்ளீர்கள்.

 பொருந்தக்கூடிய இடங்களில்பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான பாதுகாவலர் என்ற முறையில் தயவுசெய்து உங்கள் பராமரிப்பில் இருக்கின்ற சிறுவர்(களை) தரவை எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டாம்அதுபோன்ற தரவு விவரங்கள்  எங்களுக்கு அளிக்கப்பட்டால்நீங்கள் சிறுவர்கள் தரவு செயலாக்கத்திற்கு இதன் வாயிலாக அனுமதி வழங்குகிறீர்கள்மேலும் இந்த தனியுரிமை கொள்கைக்கு உட்படுவதைத் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டு உத்தரவாதம் அளித்தீர்களேயானால், அவன் அல்லது அவளின் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்

11.  தரவு தனியுரிமை அதிகாரியை தொடர்பு கொள்வதற்கான விவரங்கள்

உங்கள் கோரிக்கைகள் பிராந்தியத்தில் உள்ள தரவு தனியுரிமை அதிகாரிக்கு அனுப்பப்படும்:

(a)  மின்னஞ்சல் மூலம்உங்களின் கோரிக்கைகளை இதற்கு அனுப்பவும்:

ஹாங்காங்:  [email protected]

சிங்கப்பூர்:  [email protected]

இந்தியா:  [email protected] 

வியட்நாம்:  [email protected]

(b)  தபால் மூலம்உங்களின் கோரிக்கைகளை அனுப்ப:

ஹாங்காங்:  P.O. Box 62499, Kwun Tong Post Office, Kowloon, Hong Kong

சிங்கப்பூர்: 601 MacPherson Road #08-10, Grantral Complex @ MacPherson,  Singapore 368242

இந்தியா:  3rd Floor , No ⅓ (½-2), Annachi building , Soundarajan Street,Chennai Tamilnadu – 600017, India 

வியட்நாம்: Bluesky Office , 4th Floor, No 01 Bach Dang, Ward 2, Tan Binh District ,Ho Chi Minh City, Vietnam 

(Last update: March 2023)